வாகன குடோனில் தீ விபத்து - பொருட்கள் சேதம்

பொள்ளாச்சி அருகே பழைய இருசக்கர, நான்கு சக்கர வாகன குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
வாகன குடோனில் தீ விபத்து - பொருட்கள் சேதம்
x
பொள்ளாச்சி அருகே பழைய இருசக்கர, நான்கு சக்கர வாகன குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனுக்கு முன்புறம் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. பின்னர்  தீ மளமளவென பரவி குடோனில் இருந்த இருசக்கர நான்கு சக்கர வாகனங்களிலும் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் லட்சக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. 

Next Story

மேலும் செய்திகள்