போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி : திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு - கைது

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி : திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு - கைது
x
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே, போலீசாரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். துவாக்குடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இளைஞர் ஒருவர் வாகனத்தை நிறுத்தாமல் தப்ப முயற்சி செய்த நிலையில், போலீசார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். வாகன உரிமை அடையாள அட்டை இல்லாததால், காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது இளைஞரின் தந்தையும், திமுக நிர்வாகியுமான அப்துல் குத்தூஸ், உதவி காவல் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்