கூடன்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் - சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தல்

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும், வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடன்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் - சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தல்
x
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்து வந்தனர். தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப, அவர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள், இன்று அணுமின் நிலையத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது, அவர்கள் கற்களை வீசி தாக்கியதில், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவர் காயமடைந்தனர். இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், நெல்லை மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில், வடமாநில ஊழியர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்