கள்ளழகருக்கு வண்ண மலர்களால் பூப்பல்லாக்கு - சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது

மதுரையில் கள்ளழகர் பூப்பல்லாக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காட்சியை காண முடியாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
கள்ளழகருக்கு வண்ண மலர்களால் பூப்பல்லாக்கு - சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது
x
கொரானா ஊரடங்கால் மதுரையில் சித்திரை திருவிழா நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆண்டாள் சன்னதி முன்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கள்ளழகர் எதிர்சேவை மற்றும் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. பின்னர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதையடுத்து, சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு வண்ண மலர்களால்  அலங்கரிக்கப்பட்ட பூப்பலக்கில் சுவாமி எழுந்தருளினார். இத்துடன் 10 நாட்கள் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் மிக எளிமையாக நிறைவடைந்தது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை நேரில் பார்க்க முடியாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்