20% பணியாளர்களுடன் பனியன் நிறுவனங்கள் இயக்கம் - மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதி

திருப்பூரில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஐம்பது சதவீத பணியாளர்களுடன் பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
20% பணியாளர்களுடன் பனியன் நிறுவனங்கள் இயக்கம் - மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதி
x
பனியன் நிறுவனங்களில் பணிபுரிய வரும் தொழிலாளர்கள், மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே பணியில் அமர்த்தப்படுகின்றனர். அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், குறைந்த பட்சம் 3 அடி தூரம் விட்டுதான் நிற்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 70 %  நிறுவனங்களில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது  சுமார் 20 சதவீத பணியாளர்களை கொண்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பூரில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று நாள்தோறும் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்