கொரோனா தடுப்பு - சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ண‌ன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு - சிறப்பு அதிகாரிகள் நியமனம்
x
சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து, மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்தும், 15 மண்டலங்களில் மொத்தம் 233 தெருக்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்தும் கண்காணிப்பை அரசு முடுக்கி விட்டுள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் வருவாய் நிர்வாக ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ண‌னை சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது. இதே போல வடக்கு மண்டலத்திற்கு மகேஷ்குமார் அகர்வால், கிழக்கு மண்டலத்திற்கு அபாஷ்குமார் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிச பூஜாரி தென் மண்டலத்திற்கும் அபேய் குமார் சிங் மேற்கு மண்டலத்திற்கும் , பவானீஸ்வரி புறநகர் மண்டலத்திற்கும், சிறப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்