தொடர்ந்து நோய் தொற்றுக்கு ஆளாகும் சிறார்கள் : சென்னையில் ஒரே நாளில் 8 சிறார்களுக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை பச்சிளம் குழந்தைகள் உட்பட 150 சிறார்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
தொடர்ந்து நோய் தொற்றுக்கு ஆளாகும் சிறார்கள் : சென்னையில் ஒரே நாளில் 8 சிறார்களுக்கு கொரோனா
x
தமிழகத்தில் இதுவரை பச்சிளம் குழந்தைகள் உட்பட 150 சிறார்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஒருவார காலமாக சென்னையில் மட்டும் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி 9 சிறார்கள், ஏப்ரல் 29ஆம் தேதி 8 சிறார்கள், ஏப்ரல் 30ஆம் தேதி 11 சிறார்கள் என கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் 12 வயதுக்குட்பட்ட 28 சிறார்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில்,  சென்னையில் 2 மற்றும் இரண்டரை வயது பச்சிளம் குழந்தைகள் உட்பட  8 சிறார்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பெரும்பாலான சிறார்களுக்கு முதன்மை தொற்று பரவியிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு நோய் பரவியது எப்படி என்பது தொடர்பாக சுகாதாரத்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்