விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் மாவட்டங்களிடையே இடம் பெயர்பவர்களை கண்காணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
x
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்,  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.  அதில்,  வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,  அவர்கள் வீட்டில் அடையாள ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு வழங்கும் சிறப்பு பயண பாஸ்களை முறைகேடாக பயன்படுத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும்  தலைமைச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்