கஞ்சா புகைப்பதில் கோஷ்டி மோதல் - ஆயுதங்களால் தாக்கி கொண்ட பயங்கரம்
சென்னை அருகே கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் எரிக்கன்சேரியில், கஞ்சா புகைப்பதில், இரு கோஷ்டிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பையும் சேர்ந்தவர்கள், மாறி மாறி கற்கள், கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வீசி எறிந்து தாக்கிக் கொண்டனர். மேலும் அங்கிருந்த வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதலால், அப்பகுதி மக்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த கொடுஞ்கையூர் போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மோதல் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story