பழம், மலர் அங்காடிகள் இட மாற்றம் : ஏமாற்றத்துடன் காத்திருந்த வியாபாரிகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் இயங்கி வந்த பழம், மலர் அங்காடிகள் இன்று மாதவரம் பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
x
சென்னை கோயம்பேடு சந்தையில் இயங்கி வந்த பழம், மலர் அங்காடிகள் இன்று மாதவரம் பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அதிகாலையிலேயே சந்தையில் குவிந்த சில்லறை வியாபாரிகள் ஏமாற்றத்துடன் நுழைவாயிலில் காத்திருந்தனர். கூட்டத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு சந்தையில் இயங்கி வந்த பூ, பழ அங்காடிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான நடவடிக்கை எனவும் அறிவிக்கப்பட்டது. வெகு நேரமாக வியாபாரிகள் காத்திருந்தும் மாதவரத்தில் தற்காலிக மார்க்கெட் திறக்கப்படததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்