பி.சி.ஆர் பரிசோதனையிலும் குளறுபடி? - "2 பேருக்கு கொரோனா இருப்பதாக தவறாக அறிவிப்பு"

கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இரண்டு காவலர்களுக்கு தவறான பரிசோதனை முடிவு அளிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பி.சி.ஆர் பரிசோதனையிலும் குளறுபடி? - 2 பேருக்கு கொரோனா இருப்பதாக தவறாக அறிவிப்பு
x
சென்னை நுங்கம்பாக்கத்தில் நான்கு காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதில் இருவருக்கு மட்டுமே கொரொனா எனவும் மற்ற இருவருக்கு தொற்று இருப்பதாக தவறாக கூறப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட 2 காவலர்களும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மட்டுமே எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், 2 பேருக்கு கொரோனா இருப்பதாக தவறாக அறிவிக்கப்பட்டது, பிசிஆர் பரிசோதனை மீது சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்