"சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொதுமக்கள் ஒத்துழைத்தால் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
x
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்,  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார், வேலுமணி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் பல்வேறு துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தவிர தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்