மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1000 நிதியுதவி - அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் வீடு வீடாக சென்று தலைமை ஆசிரியை வழங்கினார்.
மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1000 நிதியுதவி - அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு
x
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம்  வீடு வீடாக சென்று தலைமை ஆசிரியை வழங்கினார். வேம்புகுடி ஊராட்சிக்குட்பட்ட  தூப்பாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 62 மாணவர்களின் குடும்பத்திற்கு தலைமை ஆசிரியை கண்ணகி நிதியுதவி வழங்கினார். பள்ளியின் சக ஆசிரியர் மற்றும் வேம்புகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர்  தலைமை ஆசிரியயை கண்ணகிக்கு  உதவி செய்தனர். நிதியுதவிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்