சிவப்பு பகுதி - 42 பேருக்கு அதிரடி தடை

திண்டுக்கலில் கொரோனா பாதித்த பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 42 பேர் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
x
திண்டுக்கலில் கொரோனா பாதித்த பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 42 பேர் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதியான பாலகிருஷ்ணாபுரத்தில் இருந்து, மறு  உத்தரவு வரும் வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வர கூடாது என வருவாய் கோட்டாட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். பணி நிமித்தமாக வெளியே செல்லும்  போது நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்