கறி விருந்து கொண்டாட்டம் - 5 பேர் கைது

தஞ்சை, வல்லத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கறி விருந்து கொண்டாட்டம் - 5 பேர் கைது
x
தஞ்சை, வல்லத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வல்லத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சென்னம்பட்டியை சேர்ந்த சிலர் கறிவிருந்து வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், கறிவிருந்து சாப்பிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஊரடங்கு உத்தரவு காரணமாக கைது செய்யப்பட்டவர்களை போலீசார்  சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்