மத்தியக்குழுவினர் சென்னையில் ஆய்வு - கோயம்பேடு சந்தையில் ஆய்வு செய்தனர்

சென்னை வந்துள்ள மத்தியக்குழுவினர் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
மத்தியக்குழுவினர் சென்னையில் ஆய்வு - கோயம்பேடு சந்தையில் ஆய்வு செய்தனர்
x
கொரோனா  தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக, மத்திய பேரிடர் மேலாண்மை வாரிய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான குழு தமிழகம் வந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்திய பின்னர், சென்னை கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.  நடமாடும் காய்கறி அங்காடிகள், வெளிமாநில லாரிகள் வருகை குறித்தும் அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தனர். எழிலகத்தில் செயல்படும் தரவு மையத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர், பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்தியகுழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்