குருமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றதாக வழக்கு : 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லாது - தமிழ்நாடு அறிவுரைக் கழகம் உத்தரவு

ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு செல்லாது என தமிழ்நாடு அறிவுரை கழகம் உத்தரவிட்டுள்ளது.
குருமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றதாக வழக்கு : 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லாது - தமிழ்நாடு அறிவுரைக் கழகம் உத்தரவு
x
சென்னையில் கடந்த ஜனவரி 26ம் தேதி மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர், ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டனர். இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த  10 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த உத்தரவு பிறப்பித்தபோது முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து, தமிழ்நாடு அறிவுரை கழகம் விசாரணை நடத்தியது. சரியான சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, 10 பேரை  குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு செல்லாது என உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்