முழு ஊரடங்கால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் 4 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள்
x
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 4 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மேலமாசி வீதியில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இலவச அரிசி, காய்கறி, பலசரக்கு, மளிகை பொருள்களை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலசரக்கு கடைகள், பெரிய ஸ்டோர்கள் தான் அடைக்கப்படும் எனவும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் தடங்கலின்றி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்