ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனோ பாதிப்பு - காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

குன்றத்தூரை சேர்ந்த 37 வயதுடைய நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி பெரிய ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து வந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனோ பாதிப்பு - காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
x
குன்றத்தூரை சேர்ந்த 37 வயதுடைய நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி பெரிய ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து வந்தார். இந்நிலையில்  அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தில் உள்ள மனைவி, பிள்ளைகள், அம்மா உள்ளிட்ட 6 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கொடுக்கப்பட்டது. தற்போது பரிசோதனையில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அந்த பகுதி முழுவதும்  சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்