"அம்மா உணவகங்களை வைத்து அரசியல் வேண்டாம்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை-எளிய மக்களும் , அமைப்பு சாரா தொழிலாளர்களும்
ஒரு வேளை உணவிற்கு கூட நாள்தோறும் போராடி வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை ஆங்காங்கு அளித்து வந்தாலும், மக்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்க வேண்டிய முக்கிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மானியத்தில் நடத்தப்படும் அம்மா உணவகங்களை அதிமுகவினரின் கைகளில் ஒப்படைத்திருப்பது மிகவும் மோசமான அரசியல் என்றாலும் அதற்குள் செல்ல தாம் விரும்பவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்மா உணவகங்களில் இலவச உணவு, தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம், மின்சார கட்டணம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

