"நாட்டு படகு மீனவர்களை கண்காணிக்க குழு" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

நாட்டு படகு மீனவர்கள், ஊரடங்கு நிபந்தனைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாட்டு படகு மீனவர்களை கண்காணிக்க குழு - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
x
மாவட்ட ஆட்சியர்களை தலைமையாக கொண்ட நெருக்கடி கால நிர்வாக குழு இந்த கண்காணிப்பை மேற்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளார். மீன்பிடி தடைகால நிவாரணநிதியை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார். திருத்திய மீன்பிடி தடைகாலத்தை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துமாறு, ஒவ்வொரு மாநில மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நுகர்வோர்களின் வீடுகளுக்கே சென்று பண்ணை மீன்களை விநியோகம் செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்