ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதலமைச்சர் : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்தார்.
x
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மாலை 4.30 மணி அளவில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவேற்றார்.  அதைத் தொடர்ந்து இருவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் அத்தியாவசிய  பணிகள் தங்கு தடையில்லாமல் நடைபெறுவது பற்றி ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்