கருணாஸின் 50 ஆவது பிறந்தநாள் - முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் தமது 50 ஆவது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கருணாஸின் 50 ஆவது பிறந்தநாள் - முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
x
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர்  கருணாஸ் தமது 50 ஆவது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிவரும் காலங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வர மாட்டேன் என்று முதலமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவித்தார். மேலும், திரைப்படம் என்பது எல்லா தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும், அதில் எந்த ஒரு சமூகத்தையும் உயர்த்தியோ தாழ்த்தியோ கருத்துகள் இடம்பெறக்கூடாது என்றும் கருணாஸ் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்