டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் -புலன் விசாரணையில் சித்தாண்டி திடுக்கிடும் தகவல்கள்

குரூப்-4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட சித்தாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
x
சிபிசிஐடி போலீசாரிடம் சித்தாண்டி நடத்திய விசாரணையில், குரூப் 4 தமிழகத்தில் முதல் 10 இடங்களை பிடித்த திரு ராஜ் ,அபிநயா ,சத்தியா ஸ்ரீகாந்த், ஆகியோரிடம் இருந்து தலா 10 லட்ச ரூபாய், வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த முறைகேட்டிற்கு, டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரிகள் பல பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனிடையே, சிவகங்கை சிபிசிஐடி எஸ்.ஐ தங்கமணி தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இன்று இரவுக்குள் பலர் சிக்குவர் என சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்