அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு - தீர்ப்பு என்னவாக இருக்கும்?

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், அவர் தங்கியிருந்த குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் முதல் தண்ணீர் கேன் போடுபவர் வரை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
x
சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், அவர் தங்கியிருந்த குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் முதல் தண்ணீர் கேன் போடுபவர் வரை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.  கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த சம்பவத்தில், 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார், 
கைது செய்த‌னர். கைதானவர்களில் பாபு என்பவர் மட்டும் உடல் நலக்குறைவால் சிறையிலே உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை அனைத்தும், கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி ஒன்றாம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளா தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்