"ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஸ்டாலின் எல்லா விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் என குற்றம் சாட்டினார்.
x
தஞ்சை பெரிய கோயில், குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே அரசின் பரிசீலனையில் உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை, திருமங்கலத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டாலின் எல்லா விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேட  முயற்சி செய்கிறார் என குற்றம் சாட்டினார். குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அறநிலையத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள குழு நல்ல முடிவை எடுக்கும் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்