சூடு பிடிக்கும் குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டவர்களிடம், கேள்வித்தாளை வழங்கி, டி.என்.பி.எஸ்.சி மறு தேர்வு நடத்தியுள்ளது.
சூடு பிடிக்கும் குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை
x
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் 70க்கும் அதிகமானோரிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தேர்வாணைய அதிகாரிகள் திடீரென்று, கணிதம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை வழங்கி,  விடை எழுத சொல்லி வாங்கியுள்ளனர். அரசு பணிக்கு தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்கள் என அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.  விசாரணையின் போது ,ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு செய்தது ஏன் என்றும் எத்தனை ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி இருக்கிறீர்கள் என்றும், பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி, அவர்களின் விளக்கங்களை பெற்றனர். மேலும் அனைவரிடமும் ஒரு கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்டு, மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  இரண்டாவது நாளாக நாளையும் விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Next Story

மேலும் செய்திகள்