சூடு பிடிக்கும் குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக 35 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
x
கடந்த செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிப்பாக அதில் 35 பேர் முதல் 100 இடங்களில் இடம் பிடித்திருந்தனர். அங்கு தேர்வு எழுதிய மாணவர்களில் பெரும்பாலானோர் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்ற தகவல் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் ந‌ந்தகுமார், தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரி சுதன் ஆகியோர் ராமநாதபுரத்தில் 2 நாள் விசாரணை மேற்கொண்டனர். இது ஒருபுறம் இருக்க, அந்த குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதி, முன்னிலை பிடித்த 35 பேர் விசாரணைக்காக இன்று சென்னை வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம், தங்கள் சொந்த மாவட்டத்தை விட்டு, ராமநாதபுரத்தை தேர்வு செய்த‌து ஏன், இதற்கு முன் நடந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் என்ன உள்ளிட்ட பல கேள்விகள் அவர்களிடம் , முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இவ்விரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய  97 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 62 பேரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்