"களம் காண தயாராகும் காளைகள் ஆன்லைனில் பதிவு - கால்நடை மருத்துவமனையில் பணிகள் தீவிரம்"

ஜல்லிக்கட்டில் களம் காண தயாராகும் காளைகளை, ஆன்லைனில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
x
ஆன் லைனில் பதிவு செய்யப்பட் பிறகே காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான பணி, மணப்பாறை கால்நடை மருத்துவமனையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.. காளையின் கொம்பு மற்றும் அதன் உயரம்  அளக்கப்பட்டு, அந்த விவரங்கள் ஆன்லைனில் ஏற்றப்படுகிறது. இதுமட்டுமின்றி காளையின் கண் மற்றும் புகைப்படம்,  காளை உரிமையாளரின் ஆதார் அட்டையும் ஆன்லைனில் ஏற்றப்பட்ட பின்னர் காளை உரிமையாளரின் இ-மெயில் முகவரிக்கு ஜல்லிக்கட்டு காளைக்கான பதிவு குறித்த தகவல் அனுப்பப்படுகிறது.  இதுமட்டுமின்றி எந்ததெந்த பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளை அழைத்து செல்லப்படுகிறது என்ற தகவலையும், உரிமையாளர்கள் கேட்டுப் பெற்று அதையும் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். இதனால் ஜல்லிக்கட்டு  போட்டிக்கான ஆயத்த பணிகள் களைகட்டி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்