குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : மேலப்பாளையத்தில் முழு கடையடைப்பு

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி நெல்லை மேலப்பாளையத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வாகனங்களும் பெரும்பாலும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : மேலப்பாளையத்தில் முழு கடையடைப்பு
x
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை  திரும்பப் பெறக் கோரி நெல்லை  மேலப்பாளையத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையி​ல், இன்று உலமாக்கள் சபை சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் நடமாற்றமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சுமார் 800 ஆட்டோ மற்றும் வேன்களும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடியுள்ளன. இந்த கடையடைப்புக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே, மாலையில் நடைபெற உள்ள   குடியுரிமை சட்டத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து  பொதுக் கூட்டத்தில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
         

Next Story

மேலும் செய்திகள்