கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்

மதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.
x
மதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த 6 ஆயிரத்து 720 தொல்லியல் பொருட்கள் மதுரை உலக தமிழ் சங்கத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், சுதை சிற்பங்களும், சூது பவள மணிகளும், விளையாட்டுப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை விடுமுறை நாட்களிலும் ஏராளமான குழந்தைகள், மாணவர்கள், பெண்கள்  தங்களது குடும்பத்துடன் வந்து ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர். கடந்த பத்து நாட்களில் மட்டும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர். இதேபோல் குழந்தைகளை கவர கூடிய 3டி தொழில்நுட்பம் மற்றும் வர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பமும் தனிஅறையில் அமைக்கப்பட்டுள்ளதால் அதனையும் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்