முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக அமைய வேண்டும் - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வெளிநாட்டு தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய கூடிய வகையில் முதலமைச்சரின் சுற்றுப்பயணம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் வெளிநாட்டு தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய கூடிய வகையில் முதலமைச்சரின் சுற்றுப்பயணம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார நெருக்கடியை சீர் செய்யும் பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றார். கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா விருப்பத்திற்கு மாறாக துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் நீதிமன்றம் மூலமாக சட்ட ரீதியாக நிவாரணம் பெறலாம் என்றும் திருநாவுக்கரசர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்