புதிதாக 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஓய்வூதியம் கேட்டு அதிக அளவில் மனுக்கள் வருவதால், புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம், நேற்று சேலம் வனவாசி பகுதியில் தொடங்கப்பட்டது. முதல்நாளில் கொங்கணாபுரம், வனவாசி உள்ளிட்ட பகுதிகளில்   4 ஆயிரத்து 93 மனுக்கள் பெறப்பட்டு, 53 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் நாள் முகாம், சேலம் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மனுக்கள் கொடுப்பதற்காக  ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று  மனு கொடுத்தனர். அங்கு மேடையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.  பட்டா வழங்குதல் மாறுதல், உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தருவதே லட்சியம் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்