கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் அவதூறு பேச்சு - ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு பதிவு

கொடநாடு கொலை விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இணைத்து அவதூறு பேசியதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த
கொடநாடு  விவகாரம் குறித்து ஸ்டாலின் அவதூறு பேச்சு - ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு பதிவு
x
கொடநாடு கொலை விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இணைத்து அவதூறு பேசியதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி, திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளம் என்ற இடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசிய  ஸ்டாலின், அவதூறு பேசியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தாண்டவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்க ஸ்டாலினுக்கு உத்தரவிட்டு,   விசாரணையை செப்டம்பர் 29 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்