பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணை 93.80 அடியை எட்டியுள்ள நிலையில் கீழ்வானி பிரதான கால்வாய் பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து  தண்ணீர் திறப்பு
x
ஈரோடு பவானிசாகர் அணை 93.80 அடியை எட்டியுள்ள நிலையில், கீழ்வானி பிரதான கால்வாய் பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 24.1 டிஎம்சி ஆகவும், நீர்வரத்து வினாடிக்கு 5193 கன அடியாகவும் உள்ளது. இந்நிலையில் இன்று பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கான விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு மதகுகளை திறந்து வைத்து, சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர் தூவினர்.  இன்று முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை 118 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

Next Story

மேலும் செய்திகள்