தலைச் சுமையாக சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் - பரிதாபத்தை ஏற்படுத்திய அதிகாரிகளின் நடைபயணம்

வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களுடன், தலைச் சுமையாக அதிகாரிகள் சென்ற காட்சி பரிதாபமாக இருந்தது.
தலைச் சுமையாக சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் - பரிதாபத்தை ஏற்படுத்திய அதிகாரிகளின் நடைபயணம்
x
வாணியம்பாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெக்னாமலை கிராமத்துக்கு, தேர்தல் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள், பாதுகாப்பு படையினருடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்றனர். கரடுமுரடான வழித்தடத்தில், கிராம மக்கள் உதவியுடன் வாக்குப் பதிவு மற்றும் பதிவு சீட்டு இயந்திரங்களை தலைச் சுமையாக அலுவலர்கள்  தூக்கிச் சென்றனர். மேலும், சமையலுக்கு தேவையான, அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் அவர்கள் சுமந்து சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி கேட்டு போராடி வரும், நெக்னா மலை கிராம மக்கள், ஏற்கனவே தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்