ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தீர்ப்பு வரும் - ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தீர்ப்பு வரும் - ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார்
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை  வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ்குமார், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  கடந்த 7 வருடங்களாக அப்பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.  தங்கள் ஆலை மற்ற நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக கூறிய பங்கஜ் குமார்,  சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக எந்த வழக்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆலை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் பெற்ற நிலையில்,  சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அது திடீரென போராட்டமாக மாறி, எதிர்பாராத விதமாக சிலர் உயிரிழந்து விட்டதாகவும் கூறிய அவர், இந்தாண்டு இறுதிக்குள் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்