வேலூர் மக்களவை தேர்தல் - முதலமைச்சர் பிரச்சார சுற்றுப்பயண விவரங்கள்

வேலூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலை முன்னிட்டு அங்கு, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பளார் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தல் - முதலமைச்சர் பிரச்சார சுற்றுப்பயண விவரங்கள்
x
வேலூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலை முன்னிட்டு அங்கு, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பளார் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 27 ஆம் தேதி சனிக்கிழமையன்று, மாலை 5 மணிக்கு வாணியம்பாடியிலும், மாலை 6 மணிக்கு ஆம்பூரில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்வார் என கூறப்பட்டுள்ளது. மேலும் 28 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு கீழ்வைத்தியணான்குப்பத்திலும், 6 மணிக்கு, குடியாத்தத்திலும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி, அணைக்கட்டு, வேலூரில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பார் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுNext Story

மேலும் செய்திகள்