சரி செய்ய முடியாத மாசு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலை - உயர்நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றச்சாட்டு

தூத்துக்குடி நகரில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விட்டு மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை பாடுவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.
சரி செய்ய முடியாத மாசு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலை - உயர்நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றச்சாட்டு
x
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு பத்தாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தமது வாதத்தை தொடர்ந்தார். அவர் தமது வாதத்தில், நிலத்தடி நீர், காற்று மாசுவை ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியது எனவும், ஆலை எந்த மாசையும் ஏற்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஆலைக்கு தான் உள்ளது என்றார். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பு வாதம் வியாழன் அன்றும் தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்