தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
x
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துப்பாக்கிச்சூடு சம்பவம், எல்லோருடைய ஆட்சி காலங்களிலும் நடந்துள்ளதாகவும்,  வேண்டும் என்றே, துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லை கூறினார். துாத்துக்குடி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது எனவும், விரைவில் உண்மை வெளியே வரும் எனவும் அவர் தெரிவித்தார். மீண்டும் பேசிய ராமசாமி, தமிழகத்தில செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என வினவினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி, கொள்ளை சம்பவங்களை தடுக்க, சென்னையில் 2 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்