ஸ்டெர்லைட் ஆலையால் மாசு என்பதை ஏற்க முடியாது - வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள அனைத்து மாசுகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை பொறுப்பாக்க முடியாது என வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையால் மாசு என்பதை ஏற்க முடியாது - வேதாந்தா நிறுவனம்
x
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்கில் இன்று ஐந்தாவது நாளாக வேதாந்தா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரிமா சுந்தரம், மாசிலாமணி ஆகியோர் வாதிட்டனர்.ஸ்டெர்லைட் ஆலையால், நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டதாக கூறுவதற்கான எந்த ஆதாரங்களையும் அரசு இதுவரை கொடுக்கவில்லை என்றும்,ஸ்டெர்லைட் ஆலையால்தான் நிலத்தடி நீர் பாதிப்பதாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.கடல் நீர் நிலத்தடி நீரில் புகுந்து விடுவதால் கிராமங்களின்  நிலத்தடி நீர் மாசடைவதாக 1989, 1994 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் வாதிட்டனர்.நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என கருத முடியாது எனக் கூறிய வழக்கறிஞர்கள், அதிக மாசு தொடர்பாக, அனல் மின் நிலையங்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் தான் மாசு ஏற்படுவதாக  கூறுவதை ஏற்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.இதை தொடர்ந்த மீண்டும் நாளை விசாரணை தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்