புகார் நகலை அளிக்க ரூ.25000 லஞ்சம் வாங்கும் காவல் ஆய்வாளர் வீடியோ : பணியிட மாற்றம் - எஸ்.பி. நடவடிக்கை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நிலப் பத்திரம் காணாமல் போனது தொடர்பாக வினோத் என்பவர் போலீசில் ஆன்லைனில் புகார் அளித்தார்.
புகார் நகலை அளிக்க ரூ.25000 லஞ்சம் வாங்கும் காவல் ஆய்வாளர் வீடியோ : பணியிட மாற்றம் - எஸ்.பி. நடவடிக்கை
x
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நிலப் பத்திரம் காணாமல் போனது தொடர்பாக வினோத் என்பவர் போலீசில் ஆன்லைனில் புகார் அளித்தார். புகார் நகலை பெற வினோத்  கெங்கவல்லி காவல் நிலையம் சென்ற போது அங்கு பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிமுத்து என்பவர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தம்மம்பட்டி சாலையில் உள்ள  கோவில் அருகே பழனிமுத்து லஞ்சம் வாங்கும் போது அதை வினோத் வீடியோ எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அந்த வீடியோ பரவியதையடுத்து வினோத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிமுத்து ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்