"தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றி அமைக்கப்படும்" - பேரவையில் மின்துறை அமைச்சர் தகவல்

இடப்பற்றாக்குறை, மின்சார இழப்பு, மின்தடை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றி அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றி அமைக்கப்படும் - பேரவையில் மின்துறை அமைச்சர் தகவல்
x
இடப்பற்றாக்குறை, மின்சார இழப்பு, மின்தடை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றி அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேட்டூர் தொகுதி உறுப்பினர் செம்மலை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பகல் நேரங்களில் காற்றாலை உற்பத்தி குறைவால் சில நேரங்களில் மின் தடை ஏற்படுவதாக விளக்கம் அளித்தார். மின்தடை குறித்து வாட்ஸ்அப் மூலமும், ஆயிரத்து 912 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் அமைச்சர் தங்கமணி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்