வித்தியாசமான செய்கையால் பரபரப்பை ஏற்படுத்தினார் நிர்மலாதேவி

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி திடீரென தியானம் செய்ததோடு, வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
வித்தியாசமான செய்கையால் பரபரப்பை ஏற்படுத்தினார் நிர்மலாதேவி
x
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அடுத்த வாய்தா 22 ஆம் தேதி என அறிவிக்கபட்ட பின்பும் நீதிமன்றத்தை விட்டு அவர் வெளியேற மறுத்தார். தனது கணவர் சங்கரபாண்டி மற்றும் தனது உறவினர்கள் வந்து தன்னை அழைத்துச்செல்வார்கள் என கூறி திடீரென நீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் ஈடுபட்டார். மேலும் தனக்கு எதிராக புகார் கூறிய மாணவிகள் தூக்கு போட்டு இறந்து விட்டதாகவும் கூறிய அவர், தனது தலைமுடியை வெட்டி தன் மீதே போட்டுக் கொண்டு வந்தார். நிர்மலாதேவியின் இந்த செய்கைகளால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்