காரில் எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்பு - கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை

திண்டுக்கல் அருகே வேலாயுதம் பாளையம் கணவாய் பகுதியில், காரில் எரிந்த நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரில் எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்பு - கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை
x
திண்டுக்கல் அருகே வேலாயுதம் பாளையம் கணவாய் பகுதியில், காரில் எரிந்த நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேடசந்தூரை அடுத்த கோவிலூரை சேர்ந்த மகாமுனி என்பவரது மகன் சிவா. இவர் நேற்றிரவு தோப்புப்பட்டி கிராமத்திற்கு கரகாட்ட நிகழ்ச்சி பார்க்க காரில் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, வேலாயுதம் பாளையம் கணவாய் பகுதியில் அவரது கார் எரிந்த நிலையில் இருந்துள்ளது. அதில் இருந்து கருகிய நிலையில் சிவாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட திண்டுக்கல் எஸ்.பி சக்திவேல், கொலையா என்ற கோணத்தில் விசாரிக்க உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்