விபத்தில் சிக்கிய முகிலன் மனைவி...

கள்ளக்குறிச்சி அருகே சமூக செயற்பாட்டாளர் முகிலனின் மனைவி பூங்கொடி வந்து கொண்டிருந்த காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
x
கள்ளக்குறிச்சி அருகே சமூக செயற்பாட்டாளர் முகிலனின் மனைவி பூங்கொடி வந்து கொண்டிருந்த காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முகிலன், 141 நாட்களுக்கு பிறகு திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை சந்திப்பதற்காக அவரது மனைவி பூங்கொடி, ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது, அவரது கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பூங்கொடி காயமின்றி தப்பினார். இதை தொடர்ந்து, பூங்கொடி வேறு காரில் சென்னைக்கு புறப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்