10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் எது? - அறிக்கை கேட்டு, சி.இ.ஓ.க்களுக்கு கல்வித்துறை கடிதம்

தமிழகத்தில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் குறித்து தெரிவிக்குமாறு, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது
x
அரசு பள்ளிகளில் 10க்கும் குறைவாக உள்ள மாணவர்களை, அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் குறித்து இன்று மாலைக்குள் அறிக்கை தருமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது- குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூடவோ, வேறு பள்ளிகளுடன் இணைக்கவோ மாட்டோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டப் பேரவையிலும், செய்தியாளர்களிடமும் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். தற்போது, அமைச்சரின் இந்த பேச்சுக்கு மாறாக கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டிருப்பது பெரும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தொடக்கப்பள்ளியில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மொத்தம் ஆயிரத்து 848 பள்ளிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்