விழுப்புரம் : பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் : பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
x
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் தாலுகா விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் புதுச்சேரி மாநிலம் நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அங்கு அருள்ஜோதி என்றவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பெண்ணை தனியாக அழைத்து வந்து அருள்ஜோதி, தனது நண்பர்களுடன் இணைந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த இளம்பெண் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் வந்து பெண்ணை மீட்டனர். இது தொடர்பாக அருள்ஜோதியை கைது செய்த போலீசார், தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்