அருப்புக்கோட்டை : குடிநீர் வழங்கப்படவில்லை என மக்கள் சாலை மறியல்

அருப்புக்கோட்டையில் திருநகரம் பகுதிக்கு உட்பட்ட 22, 23, 26, 27வது வார்டுகளில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை : குடிநீர் வழங்கப்படவில்லை என மக்கள் சாலை மறியல்
x
அருப்புக்கோட்டையில் திருநகரம் பகுதிக்கு உட்பட்ட 22, 23, 26, 27வது வார்டுகளில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்படாத மக்கள், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை அடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் சிலரை பிடித்து குண்டு கட்டாக வேனில் ஏற்றினர். தொடர்ந்து பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து உடனடியாக கீழே இறக்கிவிட்டனர். பின்னர் நகராட்சி நிர்வாகிகளின் பேச்சுவார்த்தை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்