ஒவ்வொரு மழைத்துளியையும் வீணாக்காத விவசாயி - கிணற்றில் மழை நீரை சேமித்து தானம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மழை நீரை கிணற்றில் சேமித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விவசாயி ஒருவர் அளித்து வருகிறார்.
x
கொத்தமங்கலத்தை சேர்ந்த விவசாயி வீரமணி, கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் விழும் ஒவ்வொரு மழைத் துளியும் வீணடிக்காமல் தனது தோட்டத்தில் உள்ள பழைய கிணற்றை தோன்றி மழைநீர்த் தொட்டியை உருவாக்கியுள்ளார். வீட்டில் விழும் மழை நீரை குழாய்கள் பொருத்தி அதன் வழியாக சல்லடை அமைத்து சுத்தம் செய்து தண்ணீர் கிணற்றில் விழுகிறது. கொத்தமங்கலம் பகுதியில் போர்களில் தண்ணீர் அளவு ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால், மக்கள் தண்ணீருக்கு தவிக்கும் நிலையில், தற்போது விவசாயி வீரமணி கிணற்றில் உள்ள தண்ணீரை  50-க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீராக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்